நான் பார்த்த முதல் படம் ஒரு MGR படம்.  அது இன்றும் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது.  அவரின் வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது.  படம் பெயர் நினைவில்லை ஆனால் அவர் குதிரையில் ஏறிக்கொண்டு பட்டு பாடியதும் சண்டை போட்டதும் இன்றளவும் மறக்கவில்லை.  அப்போது எனக்கு சுமார் நான்கு வயது இருக்கும். அதுவும் எனக்கு சோறு வடித்த கஞ்சி நீர் சூடாக என் மேல் தெறித்து விழுந்து என் மார்பின் மீது காயங்களோடு எனது பாட்டியுடன் மருத்துவரிடம் சென்று வரும்போது பட்டி எண்ணெய் அந்த படத்திற்கு அழைத்து சென்றார். 

பாட்டி என்னிடம் "டே நாம் டாக்டரை பார்த்துவிட்டு நேராக வீட்டுக்கு வருவதாக" சொல்லச்சொன்னார்.  ஆனால் நானோ தலையாட்டினேன். வீட்டிற்கு வந்ததும் முதல் படம் பார்த்த உற்சாகத்தில் அம்மாவிடம், "அம்மா நான் எம்ஜிஆர் படம் பார்த்தேன்.  அவரு அப்படியே குதிரையில் வந்து சண்டைபோட்டரும்மா" என்றேன். அம்மாவிற்கு கோபம் வந்து பட்டியை திட்டி தீர்த்தார். "இப்படியா ஒடம்பு சரியில்லாத  பிள்ளைய வச்சிகிட்டா படம் பார்க்க போவாங்க" என்று.

அதற்கு முதல் நாள் எனக்கு கஞ்சி நீரை சூடாக என்மீது தெளித்த பாட்டி பதறிபோய் வாழை மரப்பட்டையை கொண்டுவந்து எனது நெஞ்சின் மீது பிழிந்துவிட்டார். அது மிக பெரிய முதலுதவி என்று பிறகு புரிந்தது.  அன்றைய நினைவுகள் இன்றும் மறக்க முடியாத விசயம்.  என்மீது கஞ்சி நீரை ஊற்றிய பாட்டிபெயர் சிந்தாமணி.  என்னை மருத்துவரிடம் அழைத்து சென்ற பாட்டியின் பெயர் பார்வதி. 

நான் கிட்டத்தட்ட பெரும்பாலான நாட்கள் பார்வதிபாட்டியிடம் தான் வளர்ந்தேன்.  அதனால் என்வாழ்வில் மறக்கமுடியாத பலரில் அவரும் ஒருவர்.  என்னையும் என்வாழ்க்கை முறையும் எனது பார்வதி பாட்டியின் கதையின் மூலக்காரணம் என்றே சொல்லலாம். அவர் எனக்கு சொல்லிக்கொடுத்த ராமாயணமும் மகாபாரதமும் வாழ்வில் மறக்க முடியாத பொக்கிஷங்கள். தினமும் அவரிடம் கதைக்கேட்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது.  

என்னுடைய ஆர்வம் நான் ஒரு கூட்டத்தையே கூட்டிவைத்து பாட்டியிடம் கதைகேட்க வைப்பேன். ஒவ்வொரு நாளும் பாட்டியிடம் கதை கூட்டமும் அதிகரித்தது.  அக்கம்பக்கத்தில் இருந்தெல்லாம் குழந்தைகள் என்னோடு சேர்ந்து கொண்டு கதைக்கேட்பார்கள். அந்த நாட்கள் மறக்கமுடியாத நாட்களாக இன்றளவும் உள்ளன.  அதேபோல்தான்  எம்ஜிஆர் படமும் பட்டியும் மறக்கமுடியாதவர்கள்.  பார்வதிப்பாட்டி  
 எனது தாத்தாவின் (தந்தை வழி) மூன்றாவது மனைவி.  

நான் என்னுடைய வாழ்க்கையின் பெரும்பால நினைவுகளை இங்கே எழுதவுள்ளேன்.  இது யாருக்கு பலன் தருகிறதோ இல்லையோ நான் என்னுடைய வருங்கால சந்ததிகள் படிக்க உதவும் என்ற நோக்கோடு எழுத ஆசைப்படுகின்றேன்.   நன்றி.  


நினைவலைகள்

Posted by கை.க.சோழன் | 5:00 AM

நினைவலைகள் :


நான் எனது பழைய நினைவுச்சின்னங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  காரணம் நானும் எனது நினைவுகளும் என்னோடு இருப்பதைவிட இது மற்றவருக்கு உதவும் வண்ணமாக இடை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன்.  நான் சிறு வயதிலிருந்தே பட்ட இன்ப துன்பங்களை  நமது தமிழ் மக்களோடு பகிர்ந்து  கொள்வதில் மகிழ்ச்சி. 

நான் என்னுடைய தினக்குறிப்பில் எனது சிறு வயது அனுபவங்களை எழுத இருக்கிறேன்.  எனது குடும்ப உறுப்பினர்களின்  பெயர்கள் இதோ :

தந்தை :   கை.கண்ணன் (உயிரோடு இல்லை) 

தயார் :   க.புனிதவதி 

சகோதரர் :  க.சிவப்பிரகாச  சேரன் 

நான்  : :   க.தேசிக சோழன் (அ) கை.க.சோழன் 

இளைய சகோதரர் :  க.பாண்டியன் 

இளைய சகோதரிகள் ;  க.நந்தினி தேவி (உயிரோடு இல்லை )

                                          க. உமா மகேஸ்வரி 

இப்போது எனது குடும்பம் : 

நான்  :  :  கை.க.சோழன்

மனைவி  :  :  நிர்மலா

மகள்  : :  தே . அனுரஞ்சனி

மகன் :  தே.ஹரி ஹர சுப்ரமணிய சோழன்